ஜீவாவை பார்த்து இரண்டு வருஷத்துக்கு மேல் ஆகுது: கே.வி.ஆனந்த்

28-1446018807-kvanandnextfilm‘அனேகன்’ படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் அடுத்ததாக அஜித்தை வைத்து இயக்குவதாகவும், விஜய்யை வைத்து இயக்குவதாகவும், பின்னர் ஆர்யா, ஜீவாவை வைத்து இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குவதாகவும் தகவல் வெளியானது.

விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குவதால் ஜீவாவை கழட்டி விட்டதாகவும், ஜீவா ஏமாந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனையறிந்த கே.வி.ஆனந்த் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

‘நான் ஜீவாவை நேரில் சந்தித்து இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிறது. “ஏங்க?.. எதுக்கு இந்த கொலை வெறி? என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஜீவாதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

கே.வி.ஆனந்த் யாரை வைத்து படம் இயக்குவார் என்று விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online