ஜெய் பழகுவதற்கு இனிமையானவர்: ஆர்.ஜே.பாலாஜி

438461-jai-balajiசமீப காலமாக ஆர்.ஜே.பாலாஜி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் பாலாஜியின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. ஜெய்யுடன் இவர் நடித்துள்ள ‘புகழ்’ படம் நாளை வெளியாக உள்ளது. ஜெய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது,

ஜெய் பழகுவதற்கு இனிமையானவர். ‘வடகறி’ படத்தின் மூலம் எனக்கும் ஜெய்-க்கும் இடையே நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அந்தப் படத்தில் எங்களுக்குள் இருந்த கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இந்தப் படத்தில் தொடரும் என்பது நிச்சயம். ‘புகழ்’ தற்போதைய பரபரப்பான அரசியல் பின்னணி கொண்ட கதை. ஆயினும் சிலக் காட்சிகள் நகைச்சுவை இழையோடு சொல்லப் பட்டு இருக்கிறது.

ஒரு நடிகனாக இந்தப் படம் எனக்கு நிச்சயம் புகழ் கொடுக்கும். ஜெய் இந்தப் படத்தின் மூலம் மிகப் பெரிய புகழை அடைவார் என்பது நிச்சயம். இந்தப் படத்துக்காக நாங்கள் ஆவடி அருகே சில நாட்கள் படம் பிடித்தோம்.

எங்களுக்கும் அங்கு தினமும் கூடும் ரசிகர்களுக்கும் எந்த அளவுக்கு அன்பு இருந்ததென்றால், சற்று தாமதமாக நாங்கள் படப்பிடிப்புக்கு சென்றால் கூட அங்கு இருப்போர் என்ன சார், இன்னிக்கு லேட்டுன்னு கேப்பாங்க.

தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்தை கண்டு பயந்தோமோ இல்லையோ, இந்தக் கேள்விக்கு பயந்து நேரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விடுவோம். இயக்குனர் மணிமாறன் இந்தப் படத்துக்கு பிறகு நிச்சயம் ஒரு நட்சத்திர இயக்குனராக வலம் வருவார் என்பது உறுதி’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries