விடிய, விடிய குத்தாட்டம்; விடிந்த பிறகு புதுப்பட பூஜை – சிம்புவின் அதிரடி

str_tamper_1832016_mசிம்பு நடிப்பில் உருவாகும் படங்கள் பெரிய சர்ச்சைகளுடன் வெளிவந்தாலும், அவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றனர். தற்போது சிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.

இதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்திலும் சிம்பு நடித்து வருகிறார். அடுத்து, ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் மற்றொரு படத்திலும் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர்கள் இணையும் இந்த புதிய படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. நேற்று இரவு முழுவதும் ‘இது நம்ம ஆளு’ படத்துக்காக ‘மாமன் வெயிட்டிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுவிட்டு, விடிந்த பிறகு இந்த புதிய படத்துக்கு பூஜையும் போட்டுள்ளனர்.

இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online