இந்தி ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா

Nayanthara, Udhayanidhi Stalin in Idhu Kathirvelan Kadhal Movie Stills

Nayanthara, Udhayanidhi Stalin in Idhu Kathirvelan Kadhal Movie Stills

இந்தியில் 2014–ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘குயின்’. இந்த படத்தில் கங்கனா ராவத் நடித்தார். இது சிறந்த படத்துக்கான விருதையும், கங்கனா ராவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

ரூ.12.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.110 கோடி வசூலை குவித்தது. இந்த படத்தின் தென் இந்திய ‘ரீமேக்’ உரிமையை இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் பெற்றுள்ளார். விரைவில் இது தமிழில் தயாராக இருக்கிறது.

ரேவதி இயக்க இருக்கும் இந்த படத்துக்கு சுஹாசினி திரைக்கதை எழுதுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. முடிவில் சிறிது தயங்கிய அவர் இப்போது இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் நயன்தாரா ஜோடியாக இந்திபடத்தில் நடித்த ராஜ்குமார் ராவ் நடிக்க இருக்கிறார். திருமணத்துக்கு முதல்நாள் நாயகியின் திருமணம் நின்று போகிறது. இதனால் தேன் நிலவுக்காக வெளிநாடு செல்வதற்கு எடுத்து வைத்திருந்த விமான டிக்கெட்டில் நாயகி வெளிநாடு போகிறார். வாழ்க்கை மாறுகிறது.

மீண்டும் நாடு திரும்பும் அவள் திருமணம் பற்றி எடுக்கும் முடிவே கதை. ரேவதி–நயன்தாரா கூட்டணி சேரும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online