களஞ்சியத்தை பாராட்டிய விஜய் சேதுபதி

mu-kalanjiam-director-2பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம்காட்டு, மிட்டாமிராசு, கருங்காலி போன்ற படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். இவர் ‘கருங்காலி’ படத்தில் அஞ்சலியோடு இணைந்து எதிர் கதாநாயகனாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இயக்குனர் ஷங்கர், கே.வி.ஆனந்த் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணகுமாரின் ‘களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுத் துறை அதிகாரியாக நடித்தார். அடுத்ததாக கதிரவன் என்கிற புதிய இயக்குனரின் ‘கோடைமழை’ படத்தில் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதில் மு.களஞ்சியம் வெள்ளத்துரை என்கிற கதாபாத்திரத்தில், நடிகை பிரியங்காவின் அண்ணனாக நடித்திருக்கிறார். படம் பார்த்த அனைவரும் மு.களஞ்சியத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள்.

இந்நிலையில் இப்படத்தை பிரத்யேகமாக பார்த்த விஜய் சேதுபதி, ‘தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகச்சிறந்த நடிகன் கிடைத்துள்ளார், களஞ்சியத்திற்கு போலீஸ் கெட்-அப் சரியாக பொருந்தி இருக்கிறது, திருநெல்வேலி மாவட்டத்துக்காரனாவே மாறி வாழ்ந்திருக்கிறார்’’ என்று பாராட்டி இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online