கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை உலகம் அறிய வேண்டும்: மனைவி நிம்மி உருக்கம்

Kalabhavan-Mani-2நடிகர் கலாபவன் மணியின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து அவரது மனைவி நிம்மி இன்னும் மீளவில்லை. தங்களது ஒரே மகளான லெட்சுமிக்கு அவரால் ஆறுதலும் சொல்ல முடியவில்லை.

கணவரின் உடல் ரசாயன பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் நிம்மி அளித்த உருக்கமான பேட்டி வருமாறு:–

எனது கணவர் கலாபவன் மணி வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து கஷ்டங்களை அனுபவித்து உயர்ந்த நிலைக்கு வந்தவர். எனவே அவர் ஒருபோதும் தற்கொலை செய்யமாட்டார்.

அவர் மன உறுதிமிக்கவர். தற்கொலை எண்ணம் அவருக்கு வராது. சமீப காலமாக அவர் மது அருந்துவதை நிறுத்தி இருந்தார். நண்பர்கள் வற்புறுத்திதான் மது விருந்தில் அவரை மது அருந்த வைத்துள்ளனர். அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை உலகம் அறிய செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலாபவன்மணியின் மது விருந்தில் பங்கேற்ற நடிகர் ஜாபர் கூறும்போது ‘விருந்தில் நான் பங்கேற்றாலும் மது அருந்த வில்லை. நான் அங்கிருந்து செல்லும் வரை கலாபவன்மணி நல்ல உடல்நிலையில்தான் இருந்தார். அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான் எனக்கு அதுபற்றியே தெரிய வந்தது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online