அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் சிவகங்கை தொகுதியில் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு

kanja_karuppuபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:–

அ.தி.மு.க. தலைமை கட்டளையிட்டால் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தயார். முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்காக பிரசாரம் செய்வதை நான் பெருமையாக கருதுகிறேன். எனினும், இதுவரை என்னை பிரசாரத்துக்கு யாரும் அழைக்கவில்லை.

மேடை பேச்சு நாகரீகம் தெரியாதவன் நான் அல்ல. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் வடிவேல் மேடைகளில் தாறுமாறாக பேசி பிரச்சினைக்கு உள்ளானார். இந்த தேர்தலில் அவர் வீட்டை விட்டு வெளியேறாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

அ.தி.மு.க. சார்பில் எனது சொந்த தொகுதியான சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தேர்தலை சந்திக்க நான் தயார். அவ்வாறு போட்டியிடுவதால் எனது சினிமா பணிகள் பாதிக்காது. பிரசாரத்தின் போது யாரையும் மரியாதை குறைவாக பேசமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries