தாணுவை பற்றி குட்டிக் கதை சொன்ன விஜய்

theri-audio-launch-theri-audio-launch-vijay-cinema-events-photos-pictures-stills-2விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஏற்கெனவே, இவர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘சச்சின்’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ‘தெறி’ ஆடியோ வெளியீட்டின்போது நடிகர் விஜய், தயாரிப்பாளர் தாணுவை பற்றி பேசும்போது ஒரு குட்டிக் கதையோடு தொடங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, நாம் நிறைய தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஒரு புலி மான்கூட்டத்தை துரத்திக் கொண்டு ஓடும். அப்போது அந்த புலி எல்லா மான்களையும் துரத்துவதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட மானை மட்டும் இலக்காக வைத்துக்கொண்டு அதை வேட்டையாடி கொள்ளும்.

அந்த புலிதான் கலைப்புலி. வெற்றி என்ற ஒன்றை மட்டுமே சினிமாவில் இலக்காக கொண்டு, அதை தேடி பிடித்து புலியாக வலம் வருகிறார்.

ஆடியோ விழாவில் அனைவரும் பேசி முடித்தபின்பு, விழாவுக்கு வந்திருந்த அனைவரும் மேடையில் ஏறி, தெறி படத்தின் ஆடியோவை வெளியிட்டனர். ‘தெறி’ படத்தை அட்லி இயக்கியுள்ளார். சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries