தெறி ஆடியோ விழாவில் கலந்துகொள்ளாத சமந்தா

Samanthaவிஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் கோலாகலமாக வெளியிடப்படுகிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா இந்த ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில், இன்று காலையில் இருந்து இணையதளத்தில் வெளிவந்த ‘தெறி’ பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கடுமையான காய்ச்சலிலும் எனக்கு இது மனநிறைவை தருகிறது. என்னால் ‘தெறி’ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

‘தெறி’ படத்தை அட்லி இயக்கியுள்ளார். சமந்தா, எமி ஜாக்சன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நானிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online