அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

405012-vijayவிஜய் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் ‘தெறி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. இதில் விஜய், இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில், நள்ளிரவு இப்படத்தில் இடம் பெறும் ‘ஜித்து ஜில்லாடி…’ என்னும் பாடலின் வரிகள் வீடியோவை இணைய தளத்தில் விஜய் வெளியிட்டார்.

இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் இடம் பெறும் மற்ற பாடல்களான ‘என் ஜீவன்…’, ‘ஈனாமீனாடீகா…’ விஜய் பாடிய ‘செல்லாகுட்டி…’, ‘ராங்கு…’ ஆகிய பாடல்களின் வரிகள் வீடியோவை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார் விஜய்.

இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இணைய தளத்தில் இந்த பாடல்களை கேட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிட இருக்கின்றனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். விஜய் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கலைப்புலி தாணு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries