தேர்தலால் தனுஷுக்கு வந்த சிக்கல்

big_377052_1438328636‘தங்கமகன்’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது நடித்துள்ள படம் ‘கொடி’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இதில் துனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். தனுஷ் அரசியல்வாதியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் ஒருசில வாரங்களில் பின்னணி வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விடுமாம். ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் பள்ளி தேர்வுகள் மற்றும் தேர்தல் காரணமாக மே இறுதியில் படத்தை வெளியிட இருக்கின்றனர்.

‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries