பைலட்டாக மாறும் கார்த்தி

karthi-to-tone-down-his-body-for-his-next-film-with-mani-ratnam-photos-pictures-stillsகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தோழா’ படம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் இவருடன் நாகார்ஜூனா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தையடுத்து தற்போது ‘காஷ்மோரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது.

இவர் அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கார்த்தி விமானம் ஓட்டும் பைலட் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இவருக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்.

தற்போது படத்திற்கான முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online