150–வது படத்தில் சிரஞ்சீவி ஜோடி நயன்தாரா

nayanthara-chiranjeevi759தெலுங்கு பட உலகின் ‘மெகா ஸ்டார்’ ஆக வலம் வந்தவர் சிரஞ்சீவி. ரசிகர்களிடம் அமோக செல்வாக்கு பெற்றிருந்த இவர், ஒரு கால கட்டத்தில் அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் காங்கிரசில் ஐக்கியமாகி மத்திய மந்தியாகவும் பதவி வகித்தார்.

இப்போது, அரசியலும் இல்லாமல் சினிமாவையும் நினைக்காமல் ஒதுங்கி இருந்த சிரஞ்சீவியை அவரது ரசிகர்கள் மீண்டும் நடிக்கும்படி தொந்தரவு செய்தனர். இதுவரை 149 படங்களில் நடித்திருக்கும் சிரஞ்சீவி 150–வது படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று புதிய படத்தில் நடிக்கிறார்.

வி.வி.விநாயக் இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சிரஞ்சீவி மகன் ராம்சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து இதை தயாரிக்கிறார்.

‘நயன்தாரா அவர் நடிக்கும் தெலுங்கு படவிழாக்களில் பங்கேற்பது இல்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஒருவருடம் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது தடை நீங்கிவிட்டது. என்றாலும், தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் சிரஞ்சீவியின் 150–வது படம் என்பதால் அவருடன் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries