எந்த துறையாக இருந்தாலும் பெண்கள் வளர்ந்து மேலே வருவது கடினம்: ரம்யா பேட்டி

21-1437472439-ramyaகர்நாடக மகளிர் காங்கிரஸ் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி லட்சுமி ஹெப்பால்கர், மோட்டம்மா எம்.எல்.சி., நடிகை ரம்யா உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மோட்டம்மா எம்.எல்.சி., “பெண்கள் தங்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக பொங்கி எழவேண்டும். பழங்கால பெண்கள் வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

இப்போது உள்ள பெண்கள் புதிய சவால்களை சந்திக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக பெண்கள் ஒன்று திரண்டு போராட வேண்டியது அவசியம்“ என்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகை ரம்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் எம்.பி. ஆக வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். அதன்படி நான் ஒரு முறை எம்.பி.யாக பணியாற்றி இருக்கிறேன்.

எம்.பி. பதவியோ அல்லது எம்.எல்.சி. பதவியோ கட்சி எந்த பதவியை கொடுத்தாலும் நான் ஏற்பேன். இந்த பதவி தான் வேண்டும் கட்சியிடம் நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

எனக்கு பதவி கொடுத்தால் என்னால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்றுவேன். இன்றைய காலக்கட்டத்தில் எந்த துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் வளர்ந்து மேலே வருவது கடினமான விஷயம். நான் திரைப்பட நடிகையாக இருப்பதால் அரசியலில் வளர்வது அவ்வளவு கடினமாக இல்லை“ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online