ஜோக்கராக வரும் ராஜூமுருகன்

Joker‘குக்கூ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜூமுருகன். இதில் தினேஷ் நாயகனாகவும், மாளவிகா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றியை அடுத்து ராஜூமுருகன் புதிய படத்தை இயக்க தொடங்கினார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. தற்போது ஒட்டு மொத்த படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகளை முடித்து விட்டு தற்போது படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார்.

இந்த புதிய படத்திற்கு ‘ஜோக்கர்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் நாயகனாக ‘ஆரண்ய காண்டம்’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்த சோமசுந்தரம் நடித்திருக்கிறார். இவர் நாயகனாக நடிக்கும் முதல் படம் ‘ஜோக்கர்’.

நாயகிகளாக புதுமுகங்கள் காயத்ரி மற்றும் ரம்யா நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ட்ரீம் வாரியர் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும் ‘ஜோக்கர்’ விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online