புது அவதாரம் எடுத்திருக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

Aishwarya.R.Dhanushரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ‘3’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து ‘வை ராஜா வை’ என்னும் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் ‘ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்று கொண்டு’ Standing on an Apple Box என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகம் மூலம் எழுத்தாளராக அறிமுகமாக இருக்கும் இவர், அந்த புத்தகத்தில் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியும் எழுதி இருக்கிறாராம்.

இதுகுறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, ‘ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்று கொண்டு’ என்ற இந்த புத்தகத்தில் சினிமா களத்தில் இருந்து கொண்டு மகிழ்ச்சிகரமான கதைகளையும் நினைவுகளையும் பதிவு செய்திருக்கிறேன்.

இது மட்டுமே சொந்தமான அனுபவமாக இருந்தாலும் இதிலிருந்து பெண்களுக்கு தேவையான பல முன்னுதாரணங்கள் பிரதிபலித்திருப்பதாகவே கருதுகிறேன்.

அத்துடன் ஒவ்வொரு பெண்ணின் சந்தோஷங்களையும், துக்கங்களையும் எப்படி சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்பதும் இடம் பெற்றிருக்கும்’ என்றார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட இருக்கின்றது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries