தள்ளிபோனது சூர்யா படத்தின் இசை வெளியீடு

Suriyas-24-3-696x480சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘24’. இப்படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். இதில் சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் வைரமுத்து வரிகளில் உருவாகியுள்ள ‘காலம் என் காதலியோ’ என்ற சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி போயிருக்கிறது. அனேகமாக ஏப்ரல் மாதம் 2ம் வாரத்தில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online