சசிகுமார் தயாரித்து நடிக்கும் புதிய படம்

Sasikumar-next-movie-Vetrivel-startedசசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தாரை தப்பட்டை’. பாலா இயக்கியிருந்த இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றியை அடுத்து ‘வெற்றிவேல்’ படத்தில் நடிக்க தொடங்கினார் சசிகுமார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வசந்த மணி இயக்கியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சசிகுமார் அடுத்த படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். பிரசாத் முருகேசன் என்பவர் இயக்கும் புதிய படத்தை சசிகுமார் தனது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்து கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online