இனி நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்: நயன்தாரா

Nayantara-latest-hot-photo-gallery-969தென் இந்திய சினிமாவில் முதல் இடம்பிடித்திருக்கும் நாயகி நயன்தாரா. சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா நீச்சல் உடையில் நடிக்கப்போவதாகவும், அதற்கு கூடுதல் தொகை கேட்டதாகவும் ஒரு தகவல் பரவியது.

இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், நான் மீண்டும் நீச்சல் உடையில் நடிக்கப்போவதாக தகவல் பரவி உள்ளது. அப்படி நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை.நானும் அதை விரும்பவில்லை. ஆரம்பத்தில் அது போன்ற கவர்ச்சி உடையில் நடித்தேன். இனி நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்.

உடலை காட்டும் உடை அணிந்து கவர்ச்சி காட்டுவதை விட, கண்களால் தான் கவர்ச்சியை வெளிப்படுத்த முடியும் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். உடைகளின் அளவை குறைத்து கவர்ச்சி காட்டினாலும் கண்களில் அதை பிரதிபலிக்கும்போது தான் இந்த கவர்ச்சியில் ஈர்ப்பு இருக்கும்.

எனவே நான் மீண்டும் நீச்சல் உடைக்கு மாறுவேன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries