நடிகர் சங்கம் உடைந்து விட்டதா? விஷால் விளக்கம்

hqdefaultசமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தைப் பாண்டவர் அணி கைப்பற்றுவதற்கு அதிகமாக உழைத்தவர் ஜே.கே.ரித்திஷ் என்றும் அவரை பொதுக்குழு கூட்டத்தில் மேடையேற்றவில்லை என்றும் அவருடைய ஆதரவாளர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக பொன்வண்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இப்பிரச்சினைகளைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இப்பிரச்சினை குறித்து தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் பிளவா? அதில் பிளவை ஏற்படுத்த முடியும் என யாராவது சவால் விட தயாரா? இந்த அணி வலுவானது. நடிகர் சங்க உறுப்பினர்களுக்காகவும், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காகவும் நாங்கள் உறுதியாக செயல்படுவோம்.” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries