பேய் படத்தில் நடிக்கும் ஜெய்

jai-2a628f5dஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புகழ்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மணிமாறன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்பாவி இளைஞன், காதல் நாயகன், அதிரடி நாயகன் என்றுப் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் ஜெய் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை 70 எம் எம் நிறுவனத்தை சேர்ந்த டி.என்.அருண் பாலாஜி, கந்தவேல் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் நிறுவனம் சார்பாக திலிப் சுப்புராயன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஜெய் மூன்று வெவ்வேறு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு பிண்ணனி கொண்டுத் தயாரிக்கப்படும் இந்தப் படம் கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவை சரவணன் கவனிக்க இருக்கிறார். இசையமைப்பாளர் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries