மீண்டும் இணையும் பாய்ஸ் கூட்டணி

boys3சங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த படம் ‘பாய்ஸ்’. இதில் சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல், தமன், மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

பாய்ஸ் குரூப்பில் சித்தார்த், பரத், நகுல் ஆகியோர் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பல படங்களுக்கு இசையமைத்து பிசியான இசையமைப்பாளராக தமன் இருந்து வருகிறார். இவர் 13 வருடங்களுக்கு பிறகு ‘பாய்ஸ்’ கூட்டணி இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.

சித்தார்த் மற்றும் நகுல் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு தமன் இசையமைக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி என்பவர் இயக்குகிறார். இவர் ‘தமிழ்ப்படம்’, சந்தானம் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

விரைவில் இப்படம் தொடங்க இருக்கிறது. மேலும் புதிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online