பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் – திரை விமர்சனம்

batman-v-superman-dawn-justice-post1சூப்பர் மேன் மெட்ரோ போலீஸ் ஊரில் வசிக்கிறார். பேட்மேன் கௌடம் ஊரில் வசிக்கிறார். ஏலியனுக்கும் சூப்பர் மேனுக்கு சண்டை ஏற்படுகிறது.

இந்த சண்டையில் பேட்மேன் வசிக்கும் ஊரான கௌடமில் ஏராளமான பொருட் சேதமும், பேட்மேனுக்கு நெருங்கியவர்களும் இறக்கிறார்கள். இதனால் சூப்பர் மேன் மீது தவறான அபிபிராயம் ஏற்படுகிறது.

வில்லன் லெக்ஸ் லூதர் சூப்பர் மேனை அழிக்க கூடிய கிரிப்டோன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் முதல்கட்டமாக சூப்பர் மேன் மீது வீண் பழிகள் சுமத்தி, அவர் மீது மக்கள் வைத்துள்ள நல்லெண்ணத்தை கெடுத்து வருகிறார். சூப்பர் மேனால் நிகழ்ந்த பாதிப்புகளுக்கு சூப்பர் மேன் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு அறிவிக்கிறது.

இதற்காக சூப்பர் மேன் விளக்கம் அளிக்க வரும் நிலையில், லெக்ஸ் லூதர் சதி செய்து கட்டிடத்தை வெடிக்க வைத்து விடுகிறார். இதற்கும் சூப்பர் மேன் தான் காரணம் என்று மக்கள் கோபப்பட்டு, இந்த நாட்டுக்கு சூப்பர் மேன் தேவையில்லை என்று முடிவுக்கு வருகிறார்கள்.

இந்நிலையில் கிரிப்டோன் இருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்ட லெக்ஸ் லூதர் அதை கைப்பற்ற நினைக்கிறார். கிரிப்டோன் லெக்ஸ் லூதர் கையில் கிடைத்தால், விளைவுகள் அதிகமாக ஏற்படும் என்று எண்ணி, அதை பேட்மேன் எடுக்க செல்கிறார். அப்போது சூப்பர் மேன் அதை தடுத்து நிறுத்துகிறார். பின்னர் கிரிப்டோனை ஒரு வழியாக கைப்பற்றி விடுகிறார் பேட்மேன்.

இதையறித்த லெக்ஸ் லூதர், சூப்பர் மேனின் தாயை கடத்தி வைத்துக் கொண்டு, பேட்மேனை கொல்ல சொல்கிறார். தாயை விடுவிப்பதற்காக பேட்மேனிடம் சண்டை போடுகிறார் சூப்பர் மேன். இந்த மோதலில் யார் வென்றது? லெக்ஸ் லூதரின் தந்திரத்தை சூப்பர் மேனும், பேட்மேனும் தெரிந்துக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் பேட் மேனாக நடித்திருக்கும் பென் அப்லெக்கும், சூப்பர் மேனாக நடித்திருக்கும் ஹென்றி காவிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சூப்பர்மேனும் பேட்மேனும் சண்டை போடும் காட்சிகள் அபாரமாக இருக்கிறது. குறிப்பாக இறுதியில் வரும் சண்டைக் காட்சி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

படம் நீளமாக இருந்தாலும், காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருப்பதால் நேரம் போவது தெரியாமல் இருக்கிறது. 3டி தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போது காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக தெரிகிறது.

பேட்மேன் ரசிகர்களையும், சூப்பர்மேன் ரசிகர்களையும் கவரும் படியாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜேக் ஸ்னைடர். லாரி பாங்கின் ஒளிப்பதிவும், ஹான்ஸ் சிம்மரின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries