இளம் படைப்பாளிகள் திறமைசாலிகளாக வருகிறார்கள்: டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு

TH-S_A_CHANDRASEKA_2227182fசென்னையில் குறும்பட விழா நடந்தது. இதில் 123 படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் சிறந்த குறும் படங்களுக்கு பரிசு வழங்கும் விழா வடபழனியில் நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு ‘விசுவாசம்’ என்ற குறும் படத்துக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், ‘ஊமை’ என்ற படத்துக்கு இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ‘எ மில்லியன் திங்க்ஸ்’ என்ற படத்துக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கினார்கள்.

விழாவில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:-

‘‘குறும் படங்கள் எடுப்பது கஷ்டமானது. இரண்டு மணி நேரம் ஓடும் பெரிய படங்களின் கதையை 5 அல்லது 10 நிமிடத்தில் சுருக்கி குறும் படத்தில் சொல்ல வேண்டும். இது எளிதான காரியம் இல்லை. எனவே என்னை போன்ற டைரக்டர்களை விட, குறும்படங்கள் எடுக்கும் டைரக்டர்கள் திறமைசாலிகள்.

எங்கள் காலத்தில் கதை எழுதி வாய்ப்பு கேட்டு படகம்பெனிகளில் ஏறி இறங்குவார்கள். தயாரிப்பாளர்களிடம் பல மணிநேரம் கதையையும் சொல்வார்கள்.

ஆனால், இப்போது அப்படி இல்லை 5 நிமிட குறும்படத்தை எடுத்து போய் இது நான் எடுத்த படம் பார்த்து விட்டு வாய்ப்பு தாருங்கள் என்கிறார்கள். தயாரிப்பாளர்களும் அதை பார்த்து பிடித்து இருந்தால் தங்கள் படங்களை இயக்கும்படி சொல்கிறார்கள்.

குறும்பட இயக்குனர்கள் டைரக்டர்களாவது எளிதாகி விட்டது. முன்பு நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது ‘லேப்டாப்’ மூலம் வருகிறார்கள்.

சினிமா துறைக்கு சமீப காலமாக திறமையான படைப்பாளிகள் நிறைய பேர் வந்து கொண்டு இருக்கிறார்கள். வித்தியாசமான படங்களை உருவாக்குகிறார்கள். சிலர் சினிமா விரைவில் அழிந்து போகும் என்று பேசி வருகின்றனர்.

திறமையான இளம் படைப்பாளிகள் வந்து கொண்டு இருப்பதால் சினிமாவை யாராலும் அழிக்க முடியாது. 23 குறும்படங்களை திரையிட்ட அனைத்து டைரக்டர்களும் அடுத்து சினிமா டைரக்டர் ஆவார்கள்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

விழாவில் டைரக்டர்கள் பாலாஜி மோகன், வேல்ராஜ், நடிகர் மைம்கோபி, டாக்டர் ஜெ.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online