பாகுபலி படத்துக்கு தேசிய விருது: மத்திய அரசு அறிவிப்பு

bahubali-prabhasஇந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் 63-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘பாகுபலி’ படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளிவந்தது.

மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வாகியுள்ளார். ‘பிஃகு’ என்ற இந்தி படத்திற்காக இவருக்கு கிடைத்துள்ளது. அமிதாப் பச்சனுக்கு கிடைத்துள்ள 4-வது தேசிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கங்கனா ரணாவத் தேர்வாகியுள்ளார். ‘தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்திற்காக அவருக்கு கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கு கிடைத்துள்ளது. ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற படத்தை இயக்கியதற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online