எல்லா பெண்களையும் ஆண்கள் மதிக்க வேண்டும்: சுருதிஹாசன்

Shruti-Hassan1‘‘எல்லா பெண்களையும் ஆண்கள் மதிக்க வேண்டும். அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது’’ என்று சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:

‘‘ஒரு பார்வையிலேயே மனதில் இருப்பதை சொல்லும் திறமை பலருக்கு இருக்கிறது. கண்களை வைத்து ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதையும் சொல்லி விட முடியும். பார்வைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. ஆண்கள் பெண்களை பார்ப்பது சகஜம்தான். அழகாக இருந்தால் எல்லோரும் பார்க்கத்தான் செய்வார்கள்.

சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகள் இதுபோன்ற பார்வை தாக்குதல்களை அதிகம் சந்திக்க வேண்டும். நடிகைகள் அழகாக இருப்பதால் அவர்களை வைத்த கண் மாறாமல் பார்க்கிறார்கள். எனவே நடிகைகள் இதுபோன்ற பார்வைகளில் இருந்து தப்ப முடியாது. அழகாக இருப்பவர்களை திரும்ப திரும்ப பார்க்க தோன்றும்.

அழகான பெண்களை ஆண்கள் பார்ப்பது சகஜம் என்றாலும்கூட அந்த பார்வையில் ஆராதனை இருக்க வேண்டும். வேறு மாதிரி தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது.

அப்படி பார்ப்பவர்கள் மீது எனக்கு எரிச்சல்தான் வரும். சில ஆண்கள் பார்க்கும் பெண்ணை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்களுக்கும் பிடித்து இருந்தால் நெருங்கலாம். பிடிக்காவிட்டால் நெருக்கடி கொடுக்க கூடாது.

பலவந்தமாக காதலை சொல்ல வைத்தாலும் அந்த காதல் நிலைக்காது. விரைவில் வெறுப்பு வந்து விடும். பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும் கவுரவிக்க வேண்டும். தங்கள் சொந்த வீட்டில் இருக்கும் பெண்களை ஆண்கள் மதிக்கிறார்கள். அதுபோல் மற்ற பெண்களையும் மதிக்கும் கலாசாரம் உருவாக வேண்டும்.’’

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries