உதயநிதியின் மனிதன் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு

3_030616042027‘கெத்து’ படத்திற்கு பிறகு உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மனிதன்’. இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அஹமத் இயக்கியுள்ளார்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யை தொடர்ந்து ஹன்சிகா இரண்டாவது முறையாக உதயநிதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறை கொண்ட படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்தியில் வெற்றி பெற்ற ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் ரீமேக்காக இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை ஏப்ரல் 7ம் தேதி வெளியிட இருப்பதாக உதயநிதி அறிவித்திருக்கிறார். மேலும் படத்தை ஏப்ரல் 29ம் தேதி வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries