சி.வி.குமார் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெராப்

jackieshroff‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சிவி.குமார். இப்படத்தில் சந்திப் கிஷன், லாவண்யா திரிபாதி ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும், டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், மைம் கோபி, பாபு ஆண்டனி உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜாக்கி ஷெராப் ஏற்கெனவே, தமிழில் ‘ஆரண்ய காண்டம்’, ‘கோச்சடையான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries