ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோவாக வெற்றி பெற்றிருக்கிறேன்: ஆக்ஷன் கிங் அர்ஜூன்

Arjun Stills In Kattu Puli Movie

Arjun Stills In Kattu Puli Movie

தமிழ் சினிமாவில் ‘ஆக்ஷன் கிங்’ என்று எல்லோராலும் பாராட்டப்படுபவர் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டவர். இவரது காலத்தில் ஆறுமுகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஆக்டிங் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ இதில் எது உங்களுக்கு பிடிக்கும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, ஆக்டிங் ஹீரோ என்பது ஆக்ஷன் ஹீரோவுக்குள் அடங்கும்.

ஆக்ஷன் ஹீரோ என்பது ஆக்டிங் ஹீரோவுக்குள் அடங்கும். ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோ என்று தனித்து காட்ட முடியாது. அது ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக அமைந்த விஷயம்.

சிவாஜி கணேசன் போன்றோர் நடிப்பில் தனித்துவம் காட்டி தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். நானும் ஒரு சில படங்களில் ஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோவாக தனித்துவம் காட்ட முயற்சி செய்திருக்கிறேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்றார்.

அர்ஜுன் நடிப்பில் தற்போது ‘ஒரு மெல்லிய கோடு’ படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் நாளை வெளியாகவிருக்கிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ளார். ஷாம், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries