கன்னடத்தில் ரீமேக்காகும் தனுஷ் படங்கள்

1459511159-5416தனுஷ் நடித்த வேலையில்லா பட்டாதாரி படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கின்றனர். இதன் ரீமேக் உரிமையை லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளார்.

தனுஷ், அமலா பால், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி தனுஷுக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. அவரது கடைசி ஹிட்டும் அதுதான். அதனை கன்னடத்தில் ராக்லைன் வெங்கடேஷ் ரீமேக் செய்கிறார்.

அத்துடன் தனுஷ் தயாரித்த வெற்றிமாறனின் விசாரணை படத்தையும் அவர் கன்னடத்தில் ரீமேக் செய்ய உரிமை பெற்றுள்ளார்.

விரைவில் இவ்விரு படங்களை இயக்குகிறவர்கள் மற்றும் நடிப்பவர்களின் விவரங்களை அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online