செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…?

1459495241-4389இப்போதைக்கு கேள்விக்குறியாக இருந்தாலும், விரைவில் இது ஆச்சரியக்குறியாக மாறும் என்கிறார்கள்.

இரண்டாம் உலகம் தோல்விக்குப் பின் சிம்புவை வைத்து கான் படத்தை தொடங்கினார் செல்வராகவன். அந்தப் படம் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது. பிறகு கௌதம் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கினார். இதன் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்கவிருப்பதாக தகவல் அடிபடுகிறது. இவர்கள் இணையும் படம் அடுத்த வருடம் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online