அதர்வாவின் செம போத ஆகாத

1459580938-4726தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த அதர்வாவுக்கு ஈட்டி முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில், கிக்காஸ் என்டர்டெய்ன்மெண்ட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஒரு படத்தை தயாரித்தார். பாணா காத்தாடி மூலம் அதர்வாவை அறிமுகப்படுத்திய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள சமயத்திலும் படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், நேன்று இப்படத்திற்கு தலைப்பு வெளியிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, இப்படத்திற்கு, செம போத ஆகாத என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

தலைப்பே போதை ஏற்றும் வகையில் இருப்பதால் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கவிருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல். எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online