குங்பூ பாண்டா 3 – திரை விமர்சனம்

Kung-Fu-Panda-3ஊகுவே (ஆமை) மாஸ்டரால் 500 வருடங்களுக்கு முன்பு ஆவிகள் உலகத்துக்கு அனுப்பப்பட்ட கை (எருது), ஆவிகள் உலகத்தில் இருந்து பல்வேறு சக்தி வாய்ந்த மாஸ்டர்களை தன்வசப்படுத்தி, மிகப்பெரிய சக்தியுடன் மனித உலகத்தை கைப்பற்ற வருகிறான்.

இதையறிந்த டிராகன் வாரியர்-ஆன பூ (பாண்டா) மற்றும் அவனது குழுவினர் கையை எப்படியாவது அழிக்க முடிவெடுக்கின்றனர்.

அப்போது, ஊகுவே மாஸ்டரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடி ஒன்றை தேடிப்பிடித்து, அதில் கையை எப்படி ஆவிகள் உலகத்துக்கு ஊகுவே அனுப்பினார் என்பது பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்கின்றனர்.

மேலும், கையை அழிப்பதற்குண்டான அதிசய சக்தி பாண்டாக்கள் வசிக்கும் ஒரு ரகசிய கிராமத்தில் இருப்பதையும் அறிந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்யும்விதமாக சிறுவயதில் காணாமல் போன பூ-வை தேடி வந்த அவரது அப்பா, அந்த ரகசிய பாண்டா கிராமத்திற்கு பூ-வை மட்டும் அழைத்துச் செல்கிறார்.

இறுதியில், பூ அந்த கிராமத்துக்கு சென்று அதிசய சக்தியை பெற்று, கையை எதிர்கொண்டு உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

குங்பூ பாண்டா வரிசையில் முன்பு வெளிவந்த இரண்டு பாகங்களைப்போலவே இந்த பாகத்தையும் ரொம்பவும் காமெடியாகவும் ஆக்ஷன் நிறைந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

பெரிய சக்தியில்லாத பூ-வை ஏன் டிராகன் வாரியராக ஊகுவே மாஸ்டர் ஆக்கினார் என்பதையும் இந்த பாகத்தில் கூறியிருக்கிறார்கள்.

கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டியிருக்கின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமாக இந்த பாகமும் இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

மொத்தத்தில் ‘குங்பூ பாண்டா 3’ – குதூகலம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online