அடுத்த வருடம் படம் இயக்கும் சசிகுமார்

1459778069-9751நடிப்பு ஆசையில் விழுந்த எந்த இயக்குனரும் பிறகு இயக்குனராக சோபித்ததில்லை. சேரன், தங்கர்பச்சான், எஸ்.ஜே.சூர்யா, ரவி மரியா, அழகம் பெருமாள், கரு.பழனியப்பன், சீமான் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சசிகுமாரும் இதில் சேர்த்திதான்.

முதல் படமாக ஒரு உலகத்தரமான படத்தை தந்தவர் உடனடியாக நடிக்க கிளம்பினார். அதன் பிறகு அவர் எடுத்த ஈசன் சுப்பிரமணியபுரத்தின் அருகில் கூட வரவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறவர், படம் இயக்குவாரா என்பதே ஒரு கேள்விக்குறியாகியுள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்தவர், அடுத்த வருடம்வரை நடிக்க வேண்டிய படங்கள் உள்ளன. அவை முடிந்தபின் அடுத்த வருட இறுதியில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ள தொனியைப் பார்த்தால் அடுத்த வருடம் என்பது அதற்கு அடுத்தடுத்த வருடங்கள் என்று நீளவும் வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries