இயக்குனர் மகேந்திரன் தெறியில் வில்லனாக நடித்துள்ளார். வில்லன் வேடம். தெறியின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில், அட்லியை வானளாவ புகழ்ந்தார் மகேந்திரன்.
விட்டால், அடுத்த சத்யஜித்ரே என்று சொல்வாரோ என்று அச்சப்படுகிற அளவுக்கு இருந்தது அவரது புகழ்ச்சி.
சமீபத்திய தகவல், மகேந்திரன் இயக்கப் போகும் படத்துக்கு அட்லி வசனம் எழுதவிருக்கிறாராம்.
சாசனம் படத்திற்குப் பிறகு எந்தப் படத்தையும் இயக்காமலிருந்தவர், தெறியில் நடித்த கையோடு ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். தெறியில் அட்லியின் வசனங்களால் ஈர்க்கப்பட்டவர், அவரையே தனது படத்துக்கும் வசனம் எழுத சொல்லியிருப்பதாக தகவல் உள்ளது.
தெறியில் வரம் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் மகேந்திரனை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம்.