மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன…? மர்மத்தை விளக்கிய நடிகை

1459856688-935ஐஸ்வர்யா தத்தா, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

கிழக்கு கடற்கரை சாலையில், படத்தின் கிளைமாக்ஸை படமாக்க அனைவரும் காத்திருந்தவேளையில், ஐஸ்வர்யா தத்தா வரவில்லை. முடிசூடா மன்னன் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அவர் வராததால் 3 லட்ச ஸ்ரீபாய் நஷ்டம்,

தயாரிப்பாளர் சங்கத்திலும், போலீஸிலும் ஐஸ்வர்யா தத்தா மீது புகார் செய்வேன் என்று கொந்தளித்தார் தயாரிப்பாளர்.

வேண்டுமென்றே படப்பிடிப்பை புறக்கணிக்கவில்லை என்று ஐஸ்வர்யா தத்தா தற்போது விளக்கமளித்துள்ளார்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்திற்கு கால்ஷீட் தந்ததை மறந்து என்னை என்னுடைய மேனேஜர் முடிசூடா மன்னன் படப்பிடிப்புக்கு அனுப்பிவிட்டார். அவரது தவறால்தான் இது நடந்தது. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன எனக்கு முக்கியமான படம், அதனை நானே கெடுத்துக் கொள்வேனா என்று ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.

குறிப்பிட்ட நாளில் ஐஸ்வர்யா தத்தா மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படப்பிடிப்புக்கு வந்திருந்தால், முடிசூடா மன்னன் தயாரிப்பாளர் புகார் தந்திருப்பார். ஒரேநாளில் இரண்டு படத்துக்கு கால்ஷீட் தந்தது தவறில்லையா?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online