தமிழ் பையன் சைனா பொண்ணு

1459956875-1486நாசரின் மகன் லுத்புதீன் தனி ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பறந்து செல்ல வா’ இதன் கடைசி நாளன்று சிங்கப்பூர் விமான நிலையத்தில் நாசர் பூசணிக்காய் உடைக்க, படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

தமிழகத்தை சேர்ந்த பையன் சிங்கப்பூர் சென்ற இடத்தில் காதல் வசப்படுவதுதான் கதை. படம் முழுக்க சிங்கப்பூரிலேயே எடுக்கப்பட்டுள்ளது. லுத்புதீனுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

முக்கியமான விஷயம் நரேல் கெங் என்ற சைனா நடிகையும், சன்னி பாங் என்ற சைனா நடிகரும் படத்தில் பிரதான கேரக்டர்களில் வருகிறார்கள். மகன் தனி ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் நாசர் சிங்கப்பூர் செல்ல, அவரை வைத்தே கடைசி நாளில் பூசணிக்காய் உடைத்துள்ளனர்.

மே மாதம் படம் திரைக்கு வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online