சிம்புவை மீண்டும் சீண்டிய பாண்டிராஜ்

Pandiraj-idhu-namma-aalu1இது நம்ம ஆளு என்ற ஒரேபடம். பாண்டிராஜின் மொத்த எனர்ஜியையும் ஸ்ட்ரா போட்டு உறிகிறது. படம் வெளிவரும்வரை.

அதன் இயக்குனர் என்றவகையில், அதுபற்றி கவலைப்பட்டுத்தானே ஆக வேண்டும்.

இது நம்ம ஆளு படத்தின் டீஸரை ட்விட்டரில் வெளியிட்டவர், கூடவே, நாங்க சொன்ன நேரத்துக்கு வரமாட்டோம், நெனைச்ச நேரத்துக்குதான் வருவோம் என்று கமெண்டும் போட்டுள்ளார். சிம்பும், டி.ஆரும் இன்னும் படத்தை வெளியிடாமல் இருப்பதை இந்த கமெண்டில் மீண்டும் இடித்துரைத்திருக்கிறார் பாண்டிராஜ்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு பூஜை போட்ட போதும், வெற்றிப்படமாகவும், அதேநேரம் விரைவாகவும் முடிய வாழ்த்துகள் என்று, இது நம்ம ஆளு தாமதத்தை இடித்துக்காட்டியிருந்தார். இதோ மீண்டும் ஒருமுறை.

டி.ஆர். மட்டும் வேண்டுமென்றே படத்தை இழுத்தடிக்கிறார். வாலு படத்துக்காக சேர்த்துக் கொண்ட கடனை கொடுத்தால்தானே இது நம்ம ஆளு படத்தை வெளியிட முடியும்?

கோடிகளில் கடனிருந்தால், சொன்ன நேரத்துக்கு மட்டுமில்லை, நெனச்ச நேரத்துக்கும் வரமுடியாது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online