அசினின் சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்

1459944322-1207திருமணமாகி கணவன், குடும்பம் என்று செட்டிலான அசின் திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அசினை அகில உலகம் மறந்திருந்தவேளையில் எதற்கு இந்த அறிக்கை. நீங்களே படியுங்கள்.

“என்னை பற்றி கற்பனையான செய்திகள் பரவி வருகின்றன. நான் திருமணத்துக்கு முன்பே படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். நடிக்க வேண்டிய படங்களையும் முடித்து கொடுத்து விட்டேன். அதுபோல் விளம்பர படங்களுக்கான ஒப்பந்தங்களையும் முடித்து விட்டேன். தற்போதைய நிலையில் நான் படங்களில் மீண்டும் நடிக்கவில்லை.”

– இதுதான் அந்த அறிக்கை. அசின் சினிமாவில் நடிக்கிறார் என்று அடிக்கடி வதந்தி வருகிறதாம். அதனை விளக்கவே இப்படியொரு அறிக்கையை அசின் அளித்துள்ளார்.

கடந்தசில வருடங்களாக அசின் தலைகீழாக நின்றும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரைப் பற்றி துணுக்கு செய்திகூட வந்ததில்லை. சினிமாவில் இருந்தபோதே இதுதான் நிலை. அப்படியிருக்க, திருமணமாகி செட்டிலானவரைப் பற்றி யார் என்ன பேசப்போகிறார்கள்?

என்னோட பேர் இன்னும் இந்திப் படவுலகில் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கு என்று காட்டுவதற்காக அவர்விடுத்த தற்பெருமை அறிக்கைதான் இது.

ப்ளீஸ்… பெருசா கண்டுக்காதீங்க

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries