ஆளுக்கு பாதி 50-50

1460047160-5105கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, அடுத்து வாலிப ராஜா படத்தில் நடித்தார். பல மாதங்கள் பெட்டிக்குள் கிடந்த படம் சமீபத்தில் வெளியானது. எதிர்பார்த்த வரவேற்பு படத்துக்கு இல்லை.

இந்நிலையில், ஆளுக்கு பாதி 50-50 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ருதி ராமகிருஷ்ணன் இதில் நாயகி. ஆர்.கே.பிரதாப் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரன் இசையமைக்கிறார். அறிமுக இயக்குனர் கிருஷ்ண சாய் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கிருஷ்ண சாய் கூறும்போது, “இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் மக்கள் திரையரங்கு செல்வது அவரவர் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரித்து மகிழவே… அதைத் திரைப்படத்தின் மூலம் நிறைவேற்ற உள்ளேன்” என்றார்.

சென்னை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை லிபி சினி கிராப்ட் வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries