ஏப்ரல் 22 பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமணம்

1460046412-3319இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாளியான ரேஷ்மி மேனன். அதன் பிறகு தேநீர்விடுதி உள்பட சில படங்களில் நடித்தார். பாபி சிம்ஹாவுடன் உறுமீன் படத்தில் நடித்த போது, பாபி சிம்ஹாவுக்கும் – ரேஷ்மி மேனனுக்குமிடையில் காதல் மலர்ந்தது.

வழக்கம் போல, நாங்க காதலிக்கலை, நட்பு மட்டும்தான் என்று பம்மாத்து செய்தவர்கள் கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் வரும் 22 -ஆம் தேதி திருப்பதியில் நடக்கிறது. 24-ஆம் தேதி சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.

திருமணத்துக்குப் பின் நடிப்பதில்லை என்று ரேஷ்மி மேனன் முடிவு செய்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries