பப்லுவை குறித்து இணையத்தில் வதந்தி

1460045687-3017நடிகர் பப்லு இறந்துவிட்டதாக நேற்று இணையத்திலும், வாட்ஸ் அப்பிலும் தகவல் பரவியது. இதுபோன்ற இணைய கொலைகள் தொழில்நுட்ப யுகத்தில் சாதாரணம் என்பதால், நாம் அது பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை.

பப்லு தற்கொலை செய்து கொண்டார் என்ற அந்த வதந்தியுடன், அவர் பேசியதாக ஒரு ஆடியோவும் வெளியானது. அதில் பப்லு, “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பிறந்த பாவம். அழும்போது சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.

நான் சிரித்துக்கொண்டே சாகிறேன். சுற்றி இருப்பவர்கள் அழட்டும். என் சாவு இந்த உலகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நான் வாழும்போது என்னுடைய அருமை தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் தெரியட்டும்” என்று பேசியிருந்தார். இதனால் வதந்திக்கு வலு சேர்ந்தது.

ஆனால், அந்த அடியோ, அவர் குறும்படம் ஒன்றிற்காக பேசியது என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை பப்லுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries