ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்: மும்பை போலீஸ் கமிஷனரிடம் நடிகை கங்கனா ரணாவத் புகார்

_864b5c66-f71e-11e5-860d-a0ffe8a3a28fபிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரணாவத்தும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஹிருத்திக் ரோஷனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கங்கனா ரணாவத் சில பதிவுகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் மாறி, மாறி வக்கீல் நோட்டீசு அனுப்பிக் கொண்டனர்.

இந்த சூழலில், தன்னுடன் எடுத்துக்கொண்ட தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவ்வப்போது பரிமாறிக் கொண்ட இ-மெயில்களை ஊடகத்தினரிடம் ஹிருத்திக் ரோஷன் கசிய விட்டு விட்டதாகவும், இதனால் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகரிடம் 29 வயது நடிகை கங்கனா ரணாவத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை கங்கனா ரணாவத்தின் வக்கீல் ரிஸ்வான் சித்திக் அனுப்பியுள்ளார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கங்கனா ரணாவத், ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படங்களை வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்தில், அவர் ஊடகத்திடம் கசிய விட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். ஆகையால், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 151-ன்கீழ் ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு வக்கீல் ரிஸ்வான் சித்திக் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்த ஹிருத்திக் ரோஷனின் வக்கீல் திபேஷ் மேத்தா, கங்கனா ரணாவத்தும், அவரது வக்கீலும் குற்றம்சாட்டும் விதத்தில் எந்த ஒரு தவறான செயலிலும் ஹிருத்திக் ரோஷன் ஈடுபட்டதில்லை என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online