மீண்டும் திரையில் ஒன்றிணையும் ஜோதிகா, சூர்யா

Jyothika-and-suriyaஜோதிகா மீண்டும் நடிக்கிறார் என்றதும் அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி, மீண்டும் ஜோதிகா, சூர்யா இணைந்து நடிப்பார்களா. இப்போது, சூர்யாவே, விரைவில் நானும் ஜோதிகாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறோம் என கூறியுள்ளார்.

36 வயதினிலே படத்தைத் தொடர்ந்து, அதேபோன்ற நாயகி மையக் கதைகளாக கேட்டுவந்த ஜோதிகா, தற்போது பிரம்மா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். பிரம்மா, தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தில்தான் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. என்றாலும், பிரம்மா இதுவரை சூர்யா நடிப்பதை உறுதி செய்யவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online