சினிமாவை இனமா, மதமா பிரித்தால் அயோக்கியத்தனம் – பாரதிராஜா மீது பாலா சாடல்

1460193502-3768குற்றம்பரம்பரை வரலாறை பின்னணியாக வைத்து பாரதிராஜா, பாலா இருவரும் ஒரேநேரத்தில் படம் இயக்குவது பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

பாரதிராஜாவும், அவரது கதாசிரியர் ரத்தினகுமாரும் பாலாவை விமர்சித்து பலமுறை பேசிவிட்டனர். அதற்கு பாலா முதல்முறையாக பதிலடி தந்துள்ளார்.

குற்றப்பரம்பரை ஒரு வரலாற்று பதிவு. அதனை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம் என்று கூறியவர், ஆனால், தான், வேல ராமமூர்த்தி எழுதிய கூட்டாஞ்சோறு நாவலின் சில பகுதிகளைத்தான் படமாக்கப் போகிறேன்.

அதற்கும் பாரதிராஜாவின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

குற்றப்பரம்பரை படத்தின் பூஜையின் போது, என் மக்கள், என் இனம் என்றெல்லாம் பாரதிராஜா தனது தேவர் சாதி சார்பை வெளிப்படுத்திக் கொண்டது பலரையும் முகம் சுழிக்க வைத்தது. அதனையும் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார் பாலா.

நீங்கள் (பாரதிராஜா) மண், வீரம், ஈரம்னு என்ன வேண்டுமானாலும் எடுங். ஆனா, சினிமாவை இனமா, மதமா பிரித்தால் அது அயோக்கியத்தனம். சினிமா என்பது ஒரு உலக மொழி என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்த வார்த்தைப் போர் இத்தோடு முடியும்போல் தெரியவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries