கே.வி.ஆனந்த்துடன் இணைந்த ஹிப் ஹாப் தமிழா

Hiphop-Tamizha-Aadhi-696x614பாடகராக இருந்து இசையமைப்பாளராக மாறியுள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிப்பட இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அதனால், பல முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் இசையமைக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இவருடைய ஆர்வத்தின் பலனாக தற்போது ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

கே.வி.ஆனந்த் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்திருந்தார். தற்போது முதன்முறையாக வேறொரு இசையமைப்பாளரை தனது படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார் கே.வி.ஆனந்த். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online