ரஜினியை விட பவர் ஸ்டார் 5 மடங்கு சிறந்தவர் : ராம்கோபால் வர்மா சர்ச்சை டிவிட்

1460457273-7537நடிகர் ரஜினிகாந்தை விட பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஐந்து மடங்கு சிறந்தவர் என்று பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எப்போதும், எதைப் பற்றியும் யோசிக்காமல், தன் மனதுக்கு பட்டதை அப்படியே, தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் பவன் கல்யான் நடித்து ‘சர்தார் கப்பர் சிங்’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அந்த படத்தை படத்தைப் பற்றி ராம்கோபால் வர்மா கிண்டலடித்து வந்தார். இதனால், பவன் கல்யாணின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

1460457456-9707இதனால், அவர்களை சமாதனப்படுத்தும் விதமாக, ரூட்டை திருப்பிய வர்மா, தனது அடுத்த டிவிட்டில், பவன் கல்யாண் நடிகர் ரஜினிகாந்தை விட 5 மடங்கு உயர்ந்தவர். சிரஞ்சீவியை விட 10 மடங்கு உயர்ந்தவர் என்று கருத்து தெரிவித்தார்.

இதனால், தற்போது ரஜினி மற்றும் சிரஞ்சீவியின் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவை திட்ட ஆரம்பித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries