ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நடிக்கும் தமன்னா

1460442062-7946ரோஹித் ஷெட்டி பாலிவுட்டின் கே.எஸ்.ரவிக்குமார். ஒரு வித்தியாசம், ரவிக்குமாரின் படங்களைவிட இவரது படங்கள் அதிகம் வசூலிக்கும். சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் போன்றவை இவரது பெருமைகளைச் சொல்லும்.

கடைசியாக வெளியான தில்வாலே ஒட்டு மொத்த சமூகத்தால் கழுவி ஊற்றப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

ரோஹித் ஷெட்டியின் புதிய படத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். அதில் தமன்னாவும் முக்கிய வேடமேற்கிறார்.

இதற்கு முன் தமன்னா நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல் இரண்டும் சுமாராகவேப் போனது. சில கிசுகிசுக்களைத்தாண்டி அந்தப் படங்கள் தமன்னாவுக்கு பெயர் எதையும் சம்பாதித்து தரவில்லை. அதேநேரம் பாகுபலியின் இந்தி வெற்றி தமன்னாவை வேறுவிதமாக அறிமுகப்படுத்த, ரோஹித் ஷெட்டி அவரை தனது படத்தில் நடிக்க வைக்க உள்ளார்.

அடிச்சு கிளப்புங்க

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries