ஒரே நாளில் விஜய், வெங்கட்பிரபு, உதயநிதி படங்கள் பூஜை

1460359755-7498இன்று விஜய் 60 உள்பட மூன்று படங்கள் தொடங்கப்பட்டுள்ளன. விஜய்யின் தெறி வரும் 14 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையடுத்து அவர் பரதன் இயக்கும் படத்தில் கீர்த்தி

சுரேஷுடன் நடிக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. இதன் பூஜை இன்று போடப்பட்டது.

அதேபோல் சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிக்கும் புதிய படத்தின் பூஜையும் இன்று போடப்பட்டது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகும் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகமும் இன்று தொடங்கப்பட்டது. ஒரே நாளில் மூன்று முக்கிய படங்கள் பூஜை போடப்பட்டதால் கோடம்பாக்கத்தில் குதூகலத்தை பார்க்க முடிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online