தெறி முன்பதிவு அமோகம்

1458551860-198ஏப்ரல் 14 தேதி தெறி வெளியாகிறது. அதன் முன்பதிவு நேற்று முன்தினம் 9 -ஆம் தேதி இரவு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

விஜய் படம் என்றால் எதிர்பார்ப்பு அதிகமிருப்பது சகஜம்தான். ஆனால், தெறிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விநியோகஸ்தர்கள் வழக்கத்தைவிட அதிக பணம் தந்து படத்தை வாங்கியுள்ளனர்.

சென்னையில் ஏறக்குறைய அனைத்து திரையரங்குகளிலும் தெறியின் முதல்நாள் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. சில திரையரங்குகளில் முதல் ஒரு வாரத்திற்கான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த சில வருடங்களில் தெறி அளவுக்கு எந்தப் படமும் முன்பதிவில் சாதனை படைக்கவில்லை என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries